ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவிதி வரும் திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும்;ரவி கருணாநாயக்க
1946 ஆம் ஆண்டு தோன்றிய ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் கால வரலாற்றில் ஏற்படாத ஒரு படு தோல்வியை அடுத்து அதன் தலைவிதியை வரும் திங்கட்கிழமை தீர்மானிக்கப் போவதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்
42 வருட கால அரசியல் வரலாற்றில் தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளார் தலைவர் ரணில் விக்ரமசிங்க. கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 500,000 வாக்குகளைப் பெற்று அவரால் நிலைநாட்டப்பட்ட சாதனையும் இவ்வருடம் முறியடித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைவர்களும் வரலாறு காணாத படுதோல்வி அடைந்துள்ளார்கள். இதில் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் தலைவர் ரவி கருணாநாயக்க , பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் அடங்குவர்.
விட்டுக்கொடுத்தல் இல்லாத தலைமைத்துவத்தின் பலனாக இன்று மிகப்பெரிய பேரிழப்பை ஐக்கிய தேசிய கட்சி சந்தித்துள்ளது. இது இவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம்
இத்தகையதொரு பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் வெள்ளிக்கிழமை மத்திய செயற்குழுகூடி தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஆராய்ந்திருக்கிறது. இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய பதவிகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், அவை பற்றிய விபரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கட்சியின் பதில் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
