http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.

இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெறும்.

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு இம்முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட மாட்டது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த குழுவினர் 4 மணிக்கு பின்னர் தங்களுடைய தனிப்பட்ட போக்குவரத்து முறையை பயன்படுத்தி வாக்களிக்க வர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *