நுவரெலியா மாவட்டத்தில் 496 நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு.
நுவரெலியா மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் இன்று 04.08.2020 நுவரெலியாவில் இடம்பெற்றன.
தேர்தல் தொடர்பான விளக்கங்கள் நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றதனைத் தொடர்ந்து வாக்குப்பெட்டிகளை விநியோகம் செய்யும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.வாக்குப்பெட்டிகளை காமினி மத்திய மகா வித்தியாலயத்திலும் நுவரெலியா மாவட்ட செயலகத்திலிருந்தும் விநியோகிக்கப்பட்டன.

நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக 496 நிலையங்களில் இந்த வாக்கெடுப்புக்கள் இடம்பெறவுள்ளன.சகல வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டதுடன் வாக்குப்பெட்டிகளுக்கும் தேர்தல் கடமை உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தன.

நுவரெலியா மாவட்டத்தில் 8 அங்கத்தவர்களை தெரிவுசெய்தற்காக இம்முறை தேர்தலில் 12 அரசியல் கட்சிகளும் 13 சுயேட்சைக்குழுக்களும் மொத்தம் 275 பேர் போட்டியிடுகின்றனர்.இந்நபர்களை தெரிவுசெய்வதற்காக 5 இலட்சத்து 77 ஆயிரத்து 715 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
