அங்கொட லொக்காவிற்கு உதவிய இலங்கைப் பெண் உட்பட மூவர் இந்தியாவில் கைது
இலங்கையின் பாதாள குழு தலைவரின் ஒருவனான அங்கொட லொக்கா சமீபத்தில் இந்தியா கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது.
இதுகுறித்து இந்திய பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் பல முக்கிய விடயங்கள் சிக்கியது.
கோவையில், கொழும்பைச் சேர்ந்த அமானி தாஞ்சி(27) என்ற இலங்கைப் பெண்ணும், இந்தியா மதுரைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (36), தற்போது திருப்பூரில் வசித்து வரும் ஈரோடைச் சேர்ந்த எஸ்.தினேஸ்வரன் (32)இவருடன் இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது பின் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் இந்தியாவின் ஆதார் கார்டை அட்டையைப் பெற்றமை. குற்றவியல் சதி மற்றும் ஆவணங்களை மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட ஞாயிற்றுக்கிழமை கோவை பீலமேடு பொலிஸார் கைது செய்தனர்.
இவர்களை மேலதிகமாக விசாரிக்கும் பொழுது மேலும் பல விடயங்கள் வெளிவரும் என்று தெரிகிறது
