பாப்பாக்களை ஏவிவிட்டு மலையக மக்கள் முன்னணியினை அழித்தவரே ரணிலைப் பலப்படுத்துவதாகக் கூறுகிறார் அது நானல்ல.வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு.(வீடியோ இணைப்பு)
பாப்பாக்களை ஏவிவிட்டு மலையக மக்கள் முன்னணியினை அழித்தவர் முன்னாள் பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன் அவர் ஒரு காலத்தில் மலையக மக்கள் முன்னணியின் உபதலைவராகவும்,பிரதி அமைச்சராகவும் இருந்துள்ளார்.அதனைத் தொடர்ந்து பல கட்சிகளில் தாவி தற்போது அவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க அவர்களின் கைகளைப் பலப்படுத்தப்போவதாக அறிக்கை விட்டுயிருக்கிறார்.இந்த தேர்தலிலும் பாப்பாக்களை ஏவிவிட்டதும் அவரே ஆகவே அந்த அறிக்கை எண்ணுடையதல்ல என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஈரோஸ் அமைப்பு தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் முகமாக ஒழுங்கு செய்திருந்த தேர்தல் பிரசார கூட்டம். இன்று (02) ஹட்டன் தொழிலாளர் பொழில் மன்றத்தில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்குத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ..

மலையகத்தில் இன்று நானும் திகம்பரமும் பல்வேறு வேலைகளைச் செய்துள்ளோம்.திகம்பரம் அவர்கள் மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சினை எடுத்துப் பல வீடுகளைக்கட்டிக் கொடுத்துள்ளார்.நான் 30 வருடகாலமாக அரசியலில் பல்வேறு வேலைகளை முன்னெடுத்துள்ளேன்.கொட்டாகலை பிரதேச சபையில் ஆரம்பித்த எனது அரசியல் வாழ்க்கையில் இன்று வரை மலையக கல்விக்கும் சமூகத்திற்கும் பல அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளேன்.எனது காலத்தில் தான் சீடா செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.அது மட்டுமல்லாது ஜிட் போன்ற திட்டங்களும் எனது காலத்தில் தான் முன்னெடுக்கப்பட்டன.எமது சமூகத்திற்கு கல்வி மிகமுக்கியமானது. எனக்கருதியே பல திட்டங்களைக் கல்விக்காக முன்னெடுத்துள்ளேன்.கடந்த காலங்களில் நான் அமைச்சராக இருந்தபோது கூட நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் 275 பாடசாலைகளுக்கும் 1072 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்துள்ளேன்.பல தோட்ட வீதிகளுக்கு காபட் செய்து கொடுத்துள்ளேன்.பல கோயில்களுக்கு நிதியினையும் உபகரணங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளேன்.ஆகவே இன்று நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.நாங்கள் பல அபிவிருத்தி வேலைகளைச் செய்துகொடுத்து விட்டுத்தான் வாக்கு கேட்கிறோம்.ஆனால் ஒருசிலர் செய்துதருவதாகத் தான் வாக்கு கேட்கிறார்கள்.ஆகவே நீங்கள் தீர்மானிக்கவேண்டும் யாருக்கு வாக்களிப்பது என்று.நீங்கள் அளிக்கும் வாக்கில் தான் மலையகத்தின் தலையெழுத்தே மாறவுள்ளது.இன்று இருக்கும் அரசாங்கம் ஒரு இனத்துவேசமான அரசாங்கம் அதில் குடும்ப ஆட்சியே நடைபெறுகின்றது.ஆகவே குடும்ப ஆட்சிக்கு வாக்களிப்பதா? அல்லது ஒரு நல்ல மனிதனுக்கு வாக்களிப்பதா? என்று நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.இன்று உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அந்தநாடுகள் அனைத்தையும் விட எமது நாடு பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.அதனால் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.தேங்காயெண்ணெய்யின் விலை 600 ரூபாவை எட்டியுள்ளது அரிசி 120 ரூபா இவ்வாறு பாரிய அளவில் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.அரசாங்கம் வரிச்சலுகை வழங்கினாலும் அதில் வர்த்தகர்களும் செல்வந்தர்களும் மாத்திரமே பயனடைந்துள்ளனர்.ஏழை நாம் மேலும் மேலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளோம்.எனவே இந்நிலை மாறவேண்டும் ஆனால் நீங்கள் ஐக்கிய மக்கள் சக்தியினையும் தமிழ் முற்போக்கு வேட்பாளர்களையுமே ஆதரிக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
