http://ceylononline.lk/

Ceylon Online News Portal

விதிகளை மீறிய பயணிகள்; புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விமானப் பயணங்களில் சமூக இடைவெளி மற்றும் கட்டாய முக கவசம் போன்றவை போன்றவற்றை கடுமையாக பின்பற்றி வருகின்றது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டிட்ரோய்ட் நகரில் இருந்து ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லான்டா நகருக்கு புறப்பட்ட டெல்டா விமானத்தில் பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டனர் ஆனால் 2 பயணிகள் முக கவசம் அணிந்து கொள்ளாமல்  விமானம்  ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதை அறிந்த விமானி தனது பயணத்தை நடுவானில் முடித்துக்கொண்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து பயணிகளை இறக்கி விட்டு சென்றார்.

இந்த தகவலை டெல்டா விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் உறுதிபடுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *