உலகின் முதலாவது தடுப்பூசி: இரஷ்யா அறிவிப்பு
இரஷியாவை சேர்ந்த கமலேயா நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசியின்அனைத்து வகையான மனித பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ அறிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, “தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் அனைத்து வகையான பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன என்றும் பதிவு செய்யும் வேலைகள் மட்டுமே அடுத்த சில நாட்களில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தடுப்பூசி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என குறிப்பிட்டார்.
இதையடுத்து கொரோனா தடுப்பூசியை கண்டுபிடி த்து அறிவித்த உலக நாடுகளில், முதலாவது இடத்தை பிடித்தது இரஷ்யா.

