சமூத்தை மாற்றக்கூடிய சக்தி மலையக பெண்களிடமே உள்ளது.மஸ்கெலியாவில் எம்.ரமேஸ்வரன் தெரிவிப்பு.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இன்று அதிகமாக அங்கத்தவர்களாகப் பெண்களே இருக்கிறார்கள்,80 சதவீதம் பெண்கள் தான் அங்கத்தவர்கள்.; ஆகவே இன்று உங்களுக்கு எதை வேண்டுமானால் செய்யலாம்.; இந்த சமூகத்தை மாற்றக்கூடிய சக்தி உங்களிடமே உள்ளது. என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பொது பெரமுன வேட்பாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
மஸ்கெலிய பகுதியில் இன்று (31) திகதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்குத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..இந்த தேர்தல் சமூக ரீதியாக ஒரு முக்கியமான தேர்தல் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களும் நானும் கணபதி கணகராஜ் அவர்களும் இந்த பகுதியில் போட்டியிட இருந்தோம்.; ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் அவர் எம்மை விட்டு பிரிந்து விட்டார்.அதற்குப் பதிலாக இன்று இந்த பகுதியில் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் போட்டியிடுகிறார்.இந்த தேர்தல் நேரம் எல்லாரும் வருவார்கள்.; நீங்கள் கேட்பதெல்லாம் சரி என்று சொல்வார்கள். ஆனால் தேர்தல் முடிந்து ஐந்தாம் திகதிக்குப் பின் யாரும் இருக்கமாட்டார்கள்.ஆனால் காங்கிரஸின் உறுப்பினர்கள் யாரையாவது நீங்கள் பார்க்கலாம். குறைந்தது ஒரு பிரதிநிதியாவது இருப்பார்கள்.உங்களுக்குப் பிரச்சினைகள் வரும் சேர்;ந்து பேசி தீர்ப்பதற்கு,
தொண்டமான் அவர்கள் அமைச்சராக இருக்கும் போது அவர் எல்லா மக்களுக்கும் வேலை செய்தார்.தோட்ட பகுதிக்கும் அபிவிருத்தியைக் கொண்டு வந்தார் தொழில் வாய்ப்பினை உருவாக்கினார். கிராமப் பகுதிக்கும். தொழில் வாய்ப்பினை கொண்டு வந்தார். நகரபகுதிக்கும் அபிவிருத்தியைக் கொண்டு வந்தார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கினார். அதனால் தான் உங்களுக்குத்தெரியும் தமிழ் மக்களாக இருந்தாலும் சரி சிங்கள மக்களாக இருந்தாலும் எவ்வித வேறுபாடும் இன்றி மக்களுக்கு சேவையாற்றினார்.அதனால் இன்று எல்லாரும் காங்கிரஸஸூடன் இணைந்து வருகிறார்கள்.கடந்த காலங்களில் சுய தொழில் செய்வதற்கான ஐந்து லட்சம் ரூபா பிரஜா சக்தியூடான பெற்றுக்கொடுத்தார்.எத்தனையோ சுய தொழில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.ஆனால் கடந்த ஐந்து வருடத்தில் அதெல்லாம் ஒன்றுமே கிடைக்கவில்லை.ஆனால் இன்றும் நமக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.கோட்டாய ராஜபக்ஸவின் அரசாங்கம் இன்னும் 10 வருடத்திற்கு இருக்கப்போகிறது.அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலமான கட்சி தேர்தல் முடிந்தவுடன் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் சுயதொழில்கள் தொழில்வாய்ப்புக்கள் ஆகியன ஏற்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.இன்று நாங்கள் போகும் இடமெல்லாம் கட்சி தொழிற்சங்க பேதங்களை மறந்து இளைஞர்கள் வர்த்தகர்கள்,ஆசிரியர்கள் என பலரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அது ஏனென்றால் இளம் தலைமைத்துவத்தினை ஜீவன் தொண்டமானை ஒரு புதிய தலைவராக மலையகத்திற்கு கொண்டுவர வேண்டும். என்று.அதனால் இன்று எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
