மலையக அரசியல் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் நாங்கள் அரசியலில் களமிறங்கியிருக்கமாட்டோம். சுயேட்சைக்குழு இல 02 வேட்பாளர் வெலி ஓயா செபமாலை ஜேசுதாஸ் தெரிவிப்பு.(வீடியோ இணைப்பு)
மலையகத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர்கள் இன்று காலம் காலமாக எமது மக்களை ஏமாற்றி வந்துள்ளார்கள்.; தந்த வாக்குறுதிகள் எதனையும் அவர்கள் முழுமையாக நிறைவேற்ற வில்லை ஒரு லட்சம் வீடுகளைக் கட்டித்தருவதாகச் சொன்னார்கள். இன்று ஐந்து வருடங்களின் பின் அவர்களே சொல்கிறார்கள். 4000 வீடுகள் தான் கட்டியிருக்கிறோம். என்று அப்படி என்றால் ஒரு லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கு இன்னமும் 25 வருடங்கள் தேவைப்படும்.; அப்போது அவர்களின் பேரப்பிள்ளைகள் வந்துதான் அதனை நிறைவேற்ற வேண்டும். அதே நேரம் 1000 ரூபா சம்பளம் பெற்றுத்தருவதாகச் சொன்னார்கள். அதுவும் ஐந்து வருடங்கள் மேல் கழிந்துள்ளன.50 ரூபா பெற்றுத்தருவதாகச் சொன்னார்கள்.; அதுவும் ஐந்து வருடங்கள் கழிந்துள்ளன. இவ்வாறு அவர்கள் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் வருடக்கணக்கில் கழிந்த நிலையில் எமது மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறார்கள். ஆகவே தான் நாங்கள் தொழிலாளர்களின் பிள்ளைகளாகப் பாராளுமன்றம் செல்வதற்குக் களமிறங்கியிருக்கிறோம்.ஏனென்றால் உண்மையான தொழிலாளர்களின் பிரச்சினைகளை அறிந்தவர்கள் என்ற வகையில் எங்களுக்கு அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும். எனவே இம்முறை தேர்தலில் தொழிலாளர்களின் பிள்ளைகளான எங்களுக்குத் தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டும் என தன்னெழுச்சி குழுவின் செயலாளரும் சுயேட்சைக்குழு இல 02 வேட்பாளருமான வெலிஓhய செபமாலை ஜேசுதான் தெரிவித்தார்.
நேற்று மாலை ஹட்டன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்குத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..
நான் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்காக பொகவந்தலாவையிலிருந்து கொழும்பு வரை நடந்து சென்றுள்ளேன். சர்வதேச மட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் கொண்டு சென்றுள்ளேன்.ஆனால் தேர்தல் காலங்களில் எங்கிருந்தோ வருகிறார்கள் கோடிக்கணக்கான பணத்தை அள்ளியிறைக்கிறார்கள் இந்த பணம் எங்கிருந்து வந்தது.திருவிழா காலங்களில் வருவது போல் வந்து எமது மக்களின் வாக்குகளைச் சூறையாடிச் சென்று விடுகிறார்கள்.; அதன் பின் இவர்கள் ஐந்து வருடங்களுக்கு இந்த பக்கம் கூட வர மாட்டார்கள்.இவர்கள் இவ்வாறு தேர்தலுக்காகக் கோடிக்கணக்கில் செலவு செய்யும் பணத்தினை மலையக கல்வி அபிவிருத்திக்காகச் செலவு செய்திருக்கலாம்,அல்லது கொரோனா காலத்தில் நிவாரணமாக கொடுத்திருக்கலாம்.; அல்லது கூரை பழுதடைந்த லயங்களில் கூரைகளையாவுது மாற்றிக்கொடுத்திருக்கலாம் அதை எதனையும் செய்யாது. இவ்வாறு தொழிலாளர்களைத் தொடர்;ந்தும் ஏமாற்றி வருகிறார்கள்.தான் சிறப்பாக இருந்தால் போதும் தனக்கு அமைச்சுப் பதவிகள் கிடைத்தால் போதும் பாராளுமன்றம் பொறுப்புரிமை கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.எமது சமூகத்தைத் தொடர்ந்தும் இவ்வாறு ஏமாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது. என்ற காரணத்தினாலேயே நாங்கள் இம்முறை களமிறங்கியுள்ளோம்.எனவே தொழிலாளர்கள் சிந்தித்து தங்களின் பிள்ளைகளான எங்களை ஆதரிக்க வேண்டும் அப்போது தான் இந்த பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வு கிடைக்கும் .என அவர் மேலும் தெரிவித்தார்.
