இதுவரை உலகம் எதிர்கொண்ட “மிகவும் கடுமையான பொது சுகாதார அவசரநிலை” உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவிப்பு.
சிறப்பாக நோய் தொற்றுகளை கையாண்டு பாராட்டப்பட்ட நாடுகள் கூட இப்போது கடுமையாக போராடி வருகின்றது.
இதன் பரவல் கட்டுக்கடங்கா விவரிக்க பட முடியாத எண்ணிக்கையில் அதிவேகமாக பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
அமெரிக்கா பிரேசில் போன்ற நாடுகளில் முதல் நிலை பரவலை கூட கட்டுப்படுத்த முடியாமல் இருந்தாலும் மற்ற நாடுகளும் அபாய கட்டத்தில் உள்ளது என்றும் வரும் நாட்களில் இதன் தாக்கம் உச்சம் பெறும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கணித்து இருப்பதாக உலக சுகாதார நிறுவன தலைவர் கூறியுள்ளார் .

