மலையகத்தில் எவ்வித அபிவிருத்தி பணிகளையும் மேற்கொள்ளாதவர்கள் வாய் கூசாமல் பொய் கூறுகிறார்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பழனி திகாம்பரம் தெரிவிப்பு.(வீடியோ இணைப்பு)
மலையகப்பகுதியில் கடந்த நாலரை வருடம் காலமாக பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளேன்,தனிவீடுகள் கட்டிக் கொடுத்துள்ளேன், காணி உரிமை பெற்றுக்கொடுத்துள்ளேன், உறுதிப்பத்திரம் பெற்றுக்கொடுத்துள்ளேன்,காபட் வீதிகளை அமைத்துக் கொடுத்துள்ளேன்,பிரதேச சபைகளை அதிகரித்துள்ளேன்,வீதி அபிவிருத்தி அதிகார சபையினை உருவாக்கியுள்ளேன். ஆனால் இன்று மலையத்தில் எவ்வித அபிவிருத்தியினையும் மேற்கொள்ளாதவர்கள் வாயகுக்;கூசாமல் பொய் கூறி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
லிந்துலை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில்..மலையகத்தில் இன்று 4000 வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளேன். அதில் 2000 வீடுகளைப் பயனாளிகளிடம் ஒப்படைத்துள்ளேன்,2000 வீடுகள் கட்டி முடித்த போதிலும் அவற்றை இன்னும் தண்ணீர் ,மின்சாரம் இல்லாத காரணத்தினால் ஒப்படைக்கவில்லை. அதனை எனக்குப் பின் வந்த அமைச்சர்கள் செய்திருக்க வேண்டும்.சஜீத் பிரேமதாச அவர்கள் தோல்வியடைந்தவுடன் எனது அமைச்சுப்பதவிகள் இல்லாது போனது அதனால் எனது அபிவிருத்தி தொடர முடியாது போனது.நான் லயத்தில் பிறந்த காரணத்தினால் எனக்கு உங்களைப் பற்றி நன்கு தெரியும் அதனால் எனது காலத்தில் உங்களுக்கு உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுத்துள்ளேன். நான் செய்த சேவைகள் என்னவென்று ஒரு பத்திரிகை மூலம் உங்களுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளேன். ஆனால் இன்று ஒரு சிலர் ஏ4 சீட்டில் தங்களது இலக்கத்தை மட்டும் கொடுத்துள்ளார்கள். ஆகவே உங்களுக்கு யார் சேவை செய்தார் என்பது நன்கு தெரியும். அதே நேரம் இந்த அரசாங்கம் வந்த பின் விலைவாசிகள் அதிகரித்துள்ளது.தமிழ் பிரதிநிதித்துவத்தினை இல்லா தாக்கப்பார்க்கிறது.நமக்குத் தமிழ் பிரதிநிதித்துவம் இருந்தால் மாத்திரம் தான் நமது பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் கதைக்கலாம். எங்களிடம் அதிகாரம். இருந்தால் தான் தோட்ட நிர்வாகமும் பொலிஸ் அதிகாரிகளும் பயப்படுவார்கள்.ஆனால் இன்று மலை மலையாக வந்து வாய் கூசாமல் பொய் சொல்லுகிறார்கள்.கடந்த நாலரை ஆண்டுகளில் ஒன்றும் நடைபெறவில்லை என்று. இங்கு 50 வீடோ 100 வீடோ நான்தான் கட்டுக்கொடுத்துள்ளேன்.நாங்கள் செய்த வேலைகளைத் தொடர்ந்து செய்வதற்கே அங்கிகாரம் கேட்கிறோம். ஆனால் நிறைய பேர் எங்களுக்கு அங்கிகாரம் தாருங்கள் நாங்கள் இனிமேல் தான் வேலை செய்யப்போகிறோம் என்று.இன்று சஜீத் பிரேமதாச அவர்கள் வந்தால் மாத்திரம் தான் தமிழ் முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழலாம்.இந்த நாட்டில் தமிழ் சிங்கள முஸ்லிம் அனைத்து மக்களும் சமமாக வாழக்கூடிய நிலை ஏற்படும். என்றால் அது சஜித்பிரேமதாச ஆட்சியில் தான்.அதே அடுத்த அரசாங்கத்தில் நான் தான் அமைச்சர் அதில் உங்கள் அனைவருக்கும் வீடுகட்டி தருவேன் நிறையப்பேர் சொல்கிறார்கள் மலையகம் தொடர்பாகக் கனவு காண்கின்றோம். என்று. ஆனால் மலையகம் தொடர்பாகக் கனவு கண்டது நான் எமது மக்கள் லயத்து வாழ்க்கையிலிருந்து கிராம வாழ்க்கையாக மாற வேண்டும். என்று அதனால் இன்று வெள்ளையன் புறம், மகாத்துமா காந்திபுரம் எனப் பல கிராமங்களை உருவாக்கியுள்ளோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
