30 வினாடியில் கொரோனா தொற்றை கண்டறிய நவீன கருவி
கொரோனா தொற்றை வேகமாக கண்டறிய இஸ்ரேலிய விஞ்ஞானிகளுடன் இந்தியாவின் மத்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவன (டி.ஆர்.டி.ஓ.) தலைமை விஞ்ஞானி விஜய் ராகவன் மற்றும் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளுன்டன் இணைந்து இந்த நவீன கருவியை உருவாக்க இந்தியாவும் இஸ்ரேலும் துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன்மூலம் 30 வினாடியில் முடிவு தெரியும்.
இதற்காக இஸ்ரேலிய உயர்மட்ட விஞ்ஞானக் விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்தியாவின் டெல்லிக்கு சென்றுள் ளது.
இந்த கருவி கண்டறியப்பட்டால் இது கொரோனா தொற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி இதன் தாக்கத்தின் போக்கையே மாற்றி விடும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையை வைத்துள்ளனர்.

