http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஐ.சி.சி., தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவர்: சங்ககரா கோரிக்கை

ஐ.சி.சி., தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவர்: சங்ககரா கோரிக்கை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தலைவராக இருப்பவர் இந்தியாவின் சஷாங்க் மனோகர்.  இவரது பதவிக்காலம் முடிந்ததால்  புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்காக பலர் போட்டியில் உள்ளனர். இருப்பினும் ஒருமனதாக தேர்வு செய்ய முயற்சிகள  நடக்கின்றன. இதுகுறித்து இலங்கை அணி முன்னாள் கேப்டன் சங்ககரா கூறியது:

கங்குலிக சிறப்பாக செயல்படுவார், இவர் அனைவருடனும் நல்ல நட்பு முறைகளை பேணுவார், தனது நாட்டிற்காகவோ ஒரு நாட்டின் சார்பாகவோ முடிவு எடுக்கும் நபர் அல்ல மேலும் இவர் கிரிக்கெட்டில் பரந்துபட்ட அறிவு நிறைந்தவர் என்பதால் இப் பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *