இலங்கையில் புதிதாக மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று
சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த 5 ஐந்து பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதை அடுத்து இலங்கையின் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2782 ஆக அதிகரித்துள்ளது
நாட்டில் இதுவரை 2106 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போதைய நிலையில் 655 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
