சுயேட்சை குழு உறுப்பினர் தாக்கப்பட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதி.
பொகவந்தலா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்து நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு இரண்டு உறுப்பினர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நேற்று (25) சென்ஜோன் டிலரி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது 8.30 மணியளவில் தாக்குதலுக்கு உள்ளாகி பொகவந்தலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

