ஐ.டி.எச் தொற்றுநோய் பிரிவிலிருந்து தப்பிச் சென்ற கொவிட் 19 தொற்றாளர் வழங்கிய தகவல் போலியானவை.
கொழும்பு ஐ.டி.எச் தொற்று நோய் பிரிவில் சிகச்சைப்பெற்று வந்த கொவிட் 19 தொற்று நோயாளர் அங்கிருந்து தப்பிச் சென்ற போது சமூகத்திற்கு பரவவிடாமல் பொது மக்கள் மற்றும் சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் வழங்கி தகவல்களுக்கு அமைய பிடிக்கப்பட்டன.
குறித்த நபர் வழங்கிய தகவல்கள் பொய்யானவை என பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
குறித்த நபர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி பின்னர் வீடு ஒன்றுக்கு சென்று உடைகளை திருடி அங்கிருந்து துவிசக்கர வண்டியில் செல்வது குறித்த பகுதியில் பொறுத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கமராக்களில் பதிவாகயுள்ளன.
அதனை தொடர்ந்து குறித்த நபர் அணிந்திருந்த உடைகள் பொது சுகாதார அதிகாரிகளினால் எரிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வீட்டின் அங்கத்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த நபர் சென்ற இடங்கள் குறித்த பொலிஸார் மற்றும் இரனுவத்தினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதே நேரம் கொவிட் 19 நோயாளர்கள் சிகச்சைப்பெறும் வைத்தியசாலைகளில் பாதுகாப்பும் பலப்டுத்தப்பட்டுள்ளன.
