சிங்கப்பூரை சேர்ந்த சீன உளவாளி கைது
வாஷிங்டன் வசிக்கும் ஒரு சிங்கப்பூர் நபர் சீன உளவுத்துறையினருக்கான தகவல்களைச் சேகரிப்பதற்க்காக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். டிக்சன் யியோ என்றும் அழைக்கப்படும் ஜுன் வீ யியோ, சீன உளவுத்துறையில் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சிங்கப்பூர் நபர் “ஒரு வெளிநாட்டு சக்தியின் சட்டவிரோத முகவர்” என்று குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
சான் பிரான்சிஸ்கோ துணைத் தூதரகத்தில் பதுங்கியிருந்த சீன இராணுவத்துடன் தொடர்புடைய விஞ்ஞானி அமெரிக்க அதிகாரிகளிடம் சரண் அடைந்ததும் சீன உளவாளி கைது செய்து இருப்பதும் பெய்ஜிங்கின் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

