http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பிள்ளைகளின்  இணையவழி கல்விக்காக வருமானம் தரும் பசுவை விற்ற தந்தை

இந்தியாவின் இமாச்சல மாநிலத்தை சேர்ந்த குல்தீப் குமார் என்ற நபர் ஒருவர்நபர்  அரசு பள்ளியில் படிக்கும் தனது பிள்ளைகளுக்காக வருமானம் தரும் பசுவை விற்று ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கியுள்ளாது இணையத்தில் பிரபலமாக உள்ளது

உலகெங்கும் கொரோன வைரஸ் பரவிவரும் காலத்தினால் பள்ளிகள் மூடப்பட்டு இணையவழிக் கல்வி தொடர்கிறது.  இதில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவருக்கு  தனது  குழந்தைகளின் கல்வியை தொடர வைக்க வழி தெரியாமல் மேற்படி செயலை செய்தது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

குறித்த குழந்தைகள் அரசு பள்ளியில் இரண்டாம் மற்றும் நான்காம் வகுப்பு கல்வி பயின்று வருகின்றனர்.

இது ஒருபுறம் அதிர்ச்சியான  செயலாகஇருந்தாலும் குழந்தைகளின் எதிர்கால கல்விக்காக இவர் எடுத்த முயற்சிக்கு அனைவரும் பாராட்டுகின்றனர்

 பாலிவுட் பிரபல நடிகர் சோனு சூட் இவருக்கு  இழந்த பசுவை மீட் மீட்டுத் தர முயற்சி செய்கின்றார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *