http://ceylononline.lk/

Ceylon Online News Portal

உளவு பார்ப்பதற்கு ராணுவ விஞ்ஞானிகளை அமெரிக்காவிற்கு அனுப்பிய சீனா: தூதரகத்தில் தஞ்சமடைந் விஞ்ஞானி

டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள  சீனாவின் துணை தூதரகத்த்தை வாஷிங்டன் கட்டாயமாக மூடியதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

உயிரியல் ஆராய்ச்சியாளரான டாங் ஜுவான் அமெரிக்க விசா பெறுவதற்காக சீன ராணுவத்துடன்  தனக்கு இருந்த தொடர்புகளை மறைத்து விசா பெற்ற மோசடி குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ளார். இவரைப்பற்றி தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்த FBI  டாங்கின் வீடு மற்றும் இலத்திரனியல் சாதனங்களை  ஆராயும் போது, அவருக்கும் சீன ராணுவத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததை கண்டறிந்தனர். 

“சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) சிவில் கேடரின் சீருடையில் அவரது புகைப்படங்களை கண்டுபிடித்தனர். மேலும் ராணுவ மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (Fourth Military Medical University (FMMU)) சேவையாற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக அதிகாரிகள்  அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சீனாவில்  உள்ள ராணுவ  அதிகாரிகளின் மேற்பார்வையில், அமெரிக்க விஞ்ஞானிகளிடமிருந்து தகவல்களை  திருடிய ஒரு ராணுவ விஞ்ஞானி என்பதற்கு  ஆதாரங்கள் உள்ளன என  எஃப்.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையை தொடர்ந்து, டாங் சான்  கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக  சான்பிரான்சிஸ்கோ சீன துணைத் தூதரகத்தில் மறைந்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் தொடர்ந்தும் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து குடியரசு கட்சியை சேர்ந்த ஒருவர் ஹூஸ்டன் தூதரகம்  ஒற்றர்களின் ஒற்றர்களின் கூடாரம் என்று விமர்சித்துள்ளார்

ஏற்கனவே சீன ஹேக்கர்கள் அமெரிக்காவில் அறிவியல் தகவல்களை திருடுவதாக சீனா மீது   அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது இங்கேகுறிப்பிடத்தக்கது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *