தாய்லாந்தில் தொழில் பெற்றுத்தருவதாக பண மோசடி
இணைய தள ஊடாக விளம்பரம் செய்து தாய்லாந்தில் தொழில் வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் ஒருவர் தொடர்பாக இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விளம்பரத்தில் தாய்லாந்து பாதுகாப்பு சேவையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள அதனை தொடர்ந்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காததன் காரணமாக இவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் முறைபாடு செய்ததனை தொடர்ந்து வெளிநாட்டு பணியகம் இது தொடர்பாக அந்நாட்டு இலங்கை தூதரகத்திடம் வினவியுள்ளது.
இதன் போது இவ்வாறான தொழில்வாய்ப்பு எதுவும் தாய்லாந்தில் இல்லையென தெரிவித்ததனையடுத்து, புலனாய்வு பிரிவுக்கு முறைபாடு செய்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது,
