http://ceylononline.lk/

Ceylon Online News Portal

அமெரிக்கா கொரோனா வைரஸ் தாக்கத்தின் அதிஉச்ச ஆபத்தான வளையத்தில் உள்ளது என எச்சரிக்கை

அமெரிக்கா கொரோனா  வைரஸ் தாக்கத்தின் அதிஉச்ச ஆபத்தான வளையத்தில் உள்ளது என எச்சரிக்கை. தொற்று எண்ணிக்கையானது ஆச்சரியப்படுத்தும் வகையில் உயர்ந்து செல்கின்றது.

இரண்டு  வாரங்களில் 1 மில்லியன் புதிய கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கையை எட்டியுள்ளது.

ஜூலை 8 ஆம் தேதி அமெரிக்காவில் 3 மில்லியனாக இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் 3.94 மில்லியன் இருக்கு உயர்ந்துள்ளது இதன்படி இரண்டு வாரங்களில் ஒரு மில்லியன் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது மிகவும் பாரதூரமான உயர்வாகும்

புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி, அமெரிக்கா முழுவதும் 3.94 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 142,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *