http://ceylononline.lk/

Ceylon Online News Portal

 இம்முறை கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர)ப் பரீட்சை  2020 விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக மட்டுமே

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர)ப் பரீட்சைக்கு   விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் அனைவரும்  இணையவழி மூலமாகவே விண்ணப்பிக்க முடியும் என்றும் இதன் ஒரு பிரதியை தபால் மூலம் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டுமென்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,

1)பரீட்சைக்காக சகல விண்ணப்பதாரிகளும் நிகழ்நிலை (Online) முறைமையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

2)விண்ணப்ப படிவத்தின் அச்செடுத்த பிரதியொனறை தபால் மூலம் இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பது கட்டாயமானது.

3)பரீட்சைக்குத் தனிப்பட்ட முறையில் தோற்றுவதற்கான விண்ணப்ப படிவங்கள் 2020 ஜூலை மாதம் 22ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

4)பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தெரிவு செய்த நகரத்தையும் பாடங்களையும் சரியாக குறிப்பிடுவதில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

5)அச்சு பிரதியை கையொப்பத்துடனும் பிரிவுக்குரிய கிராம அலுவலரின் கையொப்பத்துடனும் பரீட்சைத் திணைக்களத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்கவும்

6)அப் பிரதியை திணைக்களத்திற்கு அனுப்பாத விண்ணப்பதாரர்களுக்கு பரீட்சையில் தோற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது 

7)இம்முறை பாடசாலையில் பாடசாலையில் கற்றுக் கொண்டே தனிப்பட்ட  பரீட்சார்த்தியாக்க  தோற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *