http://ceylononline.lk/

Ceylon Online News Portal

அமெரிக்க அதிபரின் காலம் கடந்த ஞானம்

மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்களும் வைரஸ் பரவல் காலத்தில் முககவசத்தின் முக்கியத்துவத்தை கூறிக் கொண்டிருந்த வேளையில் “தான் முககவசத்தை பயன்படுத்த மாட்டேன் என்றும் அதனின் பெறுமதியை மக்களுக்கு அறிவுறுத்தாத அமெரிக்க அதிபர், உலகிலேயே அதிகமாக கொரோனா வைரஸ் பாதித்த  நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து தன் மக்களிடம்  நற்பெயரை கெடுத்துக் கொண்டார்.

கொரோனா வைரஸ் பரவிய காலகட்டத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை அதனைப்பற்றிய புள்ளி விபரங்களை வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பில் அன்றாடம் வழங்கிக் கொண்டிருந்தார் அதிபர் டிரம்ப்.

இதில் ஏற்பட்ட பல்வேறு கருத்து முரண்பாடுகளை அடுத்து நடைபெறாமல் இருந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மீண்டும் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.

இதில் இவர் “இப்பொழுது எங்கு சென்றாலும் முககவசம் கொண்டு செல்கின்றேன் இதோ இங்கேயும் நான் முககவசம் கொண்டு வந்துள்ளேன் மற்றும் எங்கெங்கெல்லாம் தேவைப்படுமோ அந்தந்த இடங்களில் இதைப் பயன்படுத்த நான் தயங்க மாட்டேன்” என்று என்று தனது காலம் கடந்த ஞானத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அவர் மேலும் இங்கு கூறுகையில்,

சில மாகாணங்களில் சிறப்பாக செயல்பட்டு  கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய போதிலும் பல மாகாணங்களில் வைரஸ் பரவல் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்று கூறினார் மேலும் தற்பொழுது பரவிவரும் வேகமானது தனக்கு கவலை அளிப்பதாகவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத இடங்களில் முககவசம்  அணியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் தனது உரையில் இது ஒரு சீன வைரஸ் இதை அழிப்பதற்கு நமது  தடுப்பு மருந்தை மிக விரைவாக  பயன்பாட்டிற்கு நான் கொண்டு வருவேன் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *