இலங்கையர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி
நேற்று நாடளாவிய ரீதியில் எந்த ஒரு கொரோனா தொற்றுக்குள்ளான நபர்ககளும் அடையாளம் காணப்படவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2730 என்றும் கடந்த 24 மணி நேரத்தில் நோயாளிகள் காணப்படவில்லை என்பது இலங்கையர்களுக்கான ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி .
இதுவரை நாடளாவிய ரீதியில் தடுப்பு செயல்பாட்டு மையத்தில் 26 ஆயிரத்து 74 நபர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் மேலும் ராணுவ கண்காணிப்பு நிலையங்களில் 5222 பேர் தனிமைப்படுத்துதல் உள்ளாக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 18ஆம் திகதி முதல் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 515 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தடுப்பு செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் ஒரு வெளிநாட்டவர் உட்பட 671 நோயாளிகள் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளனர்.
