உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,13,000 கடந்துள்ளது.
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 213 நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் அதிக மனித உயிர் பலிகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
இதுவரை உலகம் முழுவதும் 6,13,000 பேர் இதனால் உயிரிழந்துள்ளார்கள் மேலும் இது வெறும் கணக்கிடப்பட்ட மரணங்கள் ஆகும்.
பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தடுப்பு மருந்துக்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றது.
அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா ஒரு லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது. தடுப்பு மருந்தை தயாரித்துக் கொண்டிருக்கும் நாடுகளிலிருந்து வெளியிடப்படும் செய்திகள் ஒருபுறம் நம்பிக்கை அளித்தாலும் மறுபுறம் வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
