தொ.தே.சங்கத்தின் அங்கத்தவர்கள் சிலர் இ.தொ.காவுடன் இணைவு
கொட்டகலை பிரதேசசபைக்குட்பட்ட பிட்டவின் தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர் கருப்பையா ராமலிங்கம் தனது ஆதரவாளர்கள் இருபத்தைந்து பேருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்துக்கொண்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானை 20.7.2020 கொட்டக்கலை சி.எல்.எப் காரியாலயத்தில் நேரில் சந்தித்து அவருடன் இணைந்துக்கொண்டனர்.

தலவாக்கலை பி.கேதீஸ்
