முரண்படும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் – பிரயோசனம் இல்லாத வர்த்தமானி என்று குற்றச்சாட்டு
சமீபத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி கொரோனா தொற்றறை கட்டுப்படுத்த முடியும் என்று தான் எண்ணவில்லை என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே அதிகாரிகளான எங்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியும் இல்லை என்றால் எமது கட்டளைகளை மக்கள் சவாலுக்கு உட்படுத்த முடியும். இதனால்தான் நாங்கள் சில அதிகாரங்களை கோருகிறோம். இதை அனாவசிய அதிகாரங்கள் என்றும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
1981ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொற்றுநோய் மற்றும் தனிமைப்படுத்துதல் கட்டளை சட்டம் இலங்கையில் ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டது. இதை நடைமுறை படுத்துபவர்கள் நாங்கள் அதாவது பரிசோதகர்கள்.
இது தொடர்பில் விரைந்து தீர்வு எடுக்கப்படாவிட்டால் எமது தொழிற்சங்க நடவடிக்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.பல்வேறு சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சர் எங்களுடன் தொடர்ந்து உரையாடி இருந்தாலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் ஏற்படும் இந்த தடையினால் தீர்வை நோக்கி செல்ல முடியாமல் உள்ளது.
எனவே இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஆனது மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சாத்தியம். இல்லை என்றால் நாட்டின் நிலைப்பாட்டை நாம் கூறுவதற்கில்லை என்று கூறினார்.
