மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று திடீரென வெடிவிபத்து; தொடரும் ஈரானின் மர்ம விபத்துக்கள்
ஈரான் நாட்டின் இஸ்பஹன் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் நகரின் முக்கிய இடங்களில் சில மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. ஆனால் இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தாலும் இந்த மர்ம விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
ஜூன் மாத இறுதியில் இருந்து நேற்றுவரை ஏழுக்கும் மேற்பட்ட மர்ம விபத்துக்களால் சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்துகளில் திரவ எரிபொருள் உற்பத்தி மையம், அணு ஆயுத செறிவூட்டல் மையம், மின் உற்பத்தி மையம், பெட்ரோ கெமிக்கல் மையத்தில் வாயுக்கசிவு போன்றவையும் உள்ளடக்கம்
