நேற்று இரவு வரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய முழு விபரம்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 20 பேர் நேற்று இரவு வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களின் முழு விபரம்,
கந்தகாடு புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடையவர்கள் 4
கட்டாலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் 3
இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் 2,
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்தவர்கள் 2
சவுதி அரேபியாவிலிருந்து வருகை தந்தவர்கள் 9
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2724 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 2035 பேர் குணமடைந்துள்ளதோடு , 678 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்கை பெற்று வருகின்றனர்.
