ஒரே நபர் இரண்டு பிரபல நடிகர்களுக்கு விடுத்த வெடிகுண்டு மிரட்டல்
சென்னை பொலீசாருக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில் நடிகர் அஜித் வீட்டில் வைத்திருக்கபட்டிருக்கும் குண்டு வெடிக்கப் போவதாகக் கூறி விட்டு இணைப்பைத் துண்டித்தார்
உடனடியாக அஜித் வீட்டிற்கு விரைந்த பொலீசார் அங்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் மோப்ப நாயும் வீடு முழுக்க சுமார் ஒரு மணிநேரம் சோதனை செய்தும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை பின்னர் இது வெறும் புரளி என்று உணர்ந்த பொலீசார், கட்டுப்பாட்டு நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பை விசாரிக்கும் போதுதான் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதுசெய்யப்பட்ட அதே நபர் தான் நடிகர் அஜீத் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்று தெரியவந்தது.
புதுச்சேரி மரக்காணத்தை சேர்ந்த புவனேஸ்வரனை பொலீசார் கைது செய்தனர்.

