பிரபல பனிச்சறுக்கு விளையாட்டு வீராங்கனை இளம் வயதில்(20) மறைவு
பிரபல பனிச்சறுக்கு விளையாட்டு வீராங்கனை எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவஸ்கயா தனது 20 ஆவது வயதில் மொஸ்கோவில் உயிரிழந்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இவருக்கு தொடர் உடல் உபாதைகள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.

இதன் காரணமாக கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து பனிச்சறுக்கு விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவருக்கு வலிப்பு நோயும் இருந்ததாக அவரது பயிற்றுவிப்பாளர் உறுதிப்படுத்தி இருந்தநிலையில் அவரின் உயிர் இறப்புக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
அலெக்ஸாண்ட்ரோவஸ்கயா உடன் இணைந்து 2018 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அவுஸ்திரேலிய வீரரான Harley Windsor தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்
