http://ceylononline.lk/

Ceylon Online News Portal

உலக பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலய பெருந்திருவிழாவில் மக்களை அனுமதிப்பதற்கான பொறிமுறைகள்

இம்மாதம் 25ஆம் திகதி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலய திருவிழா ஆரம்பமாக உள்ளது.  இவ்வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இவ்வாலய திருவிழாவை ஆலய ஊழியர்கள் மற்றும் இந்து குருமாருடன் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில்  நயினாதீவு மற்றும் மடு தேவாலயம் திருவிழாக்களில் அதிகபட்சம் 300 பக்தர்களை பங்கேற்க அனுமதிக்கப்பட்டது போல் நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு யாழ் மாநகர பதில் முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இத்திருவிழாவில் குறைந்த அளவிலாவது பக்தர்களை ஆலய வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் இருந்தது.

இக் கோரிக்கையை பரிசீலித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்பின் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ராணுவ தளபதி இவ்விழா உற்சவம் தொடர்பாக ஊடகவியலாளருக்கு அளித்த விளக்கத்தின் போது
“உலக பிரசித்தி பெற்ற இவ்வாலய திருவிழாவிற்கு இலங்கையின் பல பாகங்களிலிருந்து மக்கள் வருவார்கள் என்று எங்களுக்கு தெரியும் இதனால் இவ் வைரஸ் தொற்று காரணமாக ஆலயத்தில் பூசை வழிபாடுகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது இவை அனைத்தும் சுகாதார அமைச்சகத்தினால் வழங்கப்பட்டுள்ள  சுகாதார நடவடிக்கைகளுக்கு பின்பற்றி
திருவிழாவை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் இது சம்பந்தமாக மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *