மலையகப்பகுதியில் நல்ல சேவையை யார் செய்தாலும் அதனை வரவேற்க வேண்டும் மாறாக எதிர்க்க கூடாது.
மலையகப்பகுதியில் யார் நல்ல சேவை செய்தாலும் அதனை எதிர்க்கவே ஆட்கள் இருக்கிறார்கள.; அதனை வரவேற்பதற்கல்ல என நுவரெலியா மாவட்ட தொழிலாளர் கட்சியின் முதன்மை வேட்பாளர் கே.ஆர் கிசான் தெரிவித்தார்.
இன்று (17) திகதி டிக்கோயா பகுதியில் அமைப்பாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்;ந்து கருத்து தெரிவி;க்கையில்..
நேற்று நாங்கள் பிரசாரத்திற்கு மோரா பகுதிக்கு சென்றிருந்த போது சிலர் என்னிடம் வந்து இங்கு இரண்டு மருந்தகங்கள் உள்ளது. ஆனால் வைத்தியர்கள் எவருமில்லை. இங்கு அதிகமானவர்கள் கண்பார்வை பிரச்சினையால் அவதிபடுகிறார்கள் அவர்களுக்கு எதாவது செய்து தாருங்கள் என்று கேட்டார்கள். நான் அவர்களை கண் சத்திரசிகிச்சைக்கு லயன் கழகத்தின் அனுப்புவதற்கு பெயர் பட்டியலை எடுக்கும் போது அவ்விடத்திற்கு வந்த பொது சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் தங்களுக்கு அறிவிக்காமல் மருத்து முகாமம் செய்யக்கூடாது என என்னை விசாரித்தனர். நான் மருத்துவ முகாம் செய்யவில்லை. அவர்களுக்கு கண் சத்திரசிகிச்சை செய்வதற்கு பெயர் பட்டியலே எடுத்தேன் அதுவும் இலவசமாக அதனால் அங்கு 30 பேருக்கு கண் சத்திர சிகிச்சை செய்வதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போனதே தவிர வேறு ஒன்றும் இடம்பெறவில்லை.நேற்றைய தினம் லெதன்டி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.இதற்கு முன் பல இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி பலர் இறந்துள்ளார்கள.; இவர்களுக்கு சர்வதேச தொழிலாளர் சட்டத்தின் படி 25 லட்சம் நஸ்ட்ட ஈடாக கொடுக்க வேண்டும் ஆனால் தொழிலாயர்களுக்கு ஒரு நாள் சம்பளம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக நாங்கள் ஜெனிவா வரை அறிவித்துள்ளதோடு மனித உரிமை நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளோம்.
அதே போன்று தோட்ட வைத்திய சேவை தோட்டத்தில் இருக்க வேண்டும் அவர்களின் சேவையினை இன்று மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள். முன்னார் திரிபோசா வழங்கள் தோட்ட வைத்தியர் மூலம் தான் நடைபெற்றன.ஆனால் இன்று திரிபோசா ரெண்டு பக்கட் வாங்க ஆயிரம் செலவு செய்ய வேண்டியுள்ளது.எனவே தோட்ட வைத்தியருக்கு தேவையான வசதிகளை செய்து அந்த தோட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் திறக்கப்படுவதன் மூலமே இவ்வாறு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
அதே நேரம் உலகில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நாடுகளில் முன்னணியில் இருந்தது இலங்கை தான் தேர்தலை நோக்காக கொண்டு செயப்பட்டதன் காரணமாக இனறு தொற்றாளர்கள் அதிகரித்துள்ளார்கள்.எனவே நாங்கள் சொன்னோம் தேர்தலை பிற்போடுமாறு ஆனால் அரசாங்கம் அதனை செய்யாது சுயநலத்தினை மாத்திரம் பார்த்ததன் காரணமாக இன்று பல மாவட்டங்களுக்கு பரவியுள்ளன.அதனால் இன்று பொது சுகாதார பரிசோதகர்கள் விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இந்த விடயத்தில் அரசாங்கம் நன்கு சிந்தித்து சரியான முடிவினை எடுக்க வேண்டும் அதே நேரம் இன்று பல தோட்டங்களில் ஈடிப் சேவை பணம் இது வழங்கப்படாது உள்ளது. ஒரு சில தோட்டங்களில் பல வருட கணக்காகின்றன.இது குறித்தும் உரியவர்கள் கவமெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்
