http://ceylononline.lk/

Ceylon Online News Portal

எல்லையை கடக்க துணிவை ஏற்படுத்திய இந்தியா – பாகிஸ்தான் முகநூல் காதல்

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் முகமது சித்திக் என்பவர் தனது 20 வயது மகனை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

பெற்றோர் அளித்த புகாரை அடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசாருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பொலீஸ் அவரது மொபைல் லொகேஷனை ஆய்வு செய்ததை அடுத்து சிக்னல் இந்தியா – பாகிஸ்தான் எல்லையோர பகுதியான டொலவிரா கிராமத்தை காட்டுவதை கண்டறிந்தனர்.

உடனடியாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.  பாகிஸ்தான் எல்லையை அடைவதற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டருக்கு முன்னதாக ரன் ஆஃப் கட்ச் பகுதியில் வறட்சியால் சோர்வடைந்து பாதிக்கப்பட்டு சுய நினைவுயின்றி 2 மணி  நேரம் கிடந்த ஜிஷானை தேடி கண்டுபிடித்துள்ளனர்.

பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்,  முகநூல் மூலம் அறிமுகமான சம்ரா என்னும் பெண்ணை காதலிப்பதாகவும் இவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சியின் ஷாஆஹ் ஃபைசல் டௌன் எனும் இடத்தில் வசித்து வருவதாகவும்  இதனால்தான் பாகிஸ்தான் செல்ல முயன்றதாகவும் கூகுள் மேப் உதவியினால் இங்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதேபோன்று 2012ஆம் ஆண்டு வாலிபர் ஒருவருக்கு நடந்த துயரமான சம்பவத்தை நினைவு கூற வேண்டும். எல்லையைக் கடந்த வாலிபர் பாகிஸ்தான் பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் ஆறு வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

எல்லை பாதுகாப்பு படையினர் விரைந்து செயல்படவில்லை என்றால் இதே நிலைமைதான் ஜிஷானுக்கும் ஏற்பட்டிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *