http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நேற்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள இவர்களில் இரண்டு பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த கைதிகள் 3

சேனபுரா புனர்வாழ்வு மையத்தைச் சேர்ந்த கைதிகள் 3

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்   1

கம்பஹாவை சேர்ந்தவர்கள்     2

ராஜங்கனயாயவைச் சேர்ந்த 12 வயது சிறுமி    1

இதனையடுத்து நேற்று வரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,697 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 674 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 99 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 2,012 பேர் குணமடைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *