http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொழும்பு 02 பிரசித்திபெற்ற கங்காராமை மகா விகாரையில் இருந்த பழமையான சிவலிங்கமும் நவக்கிரகங்களும் பிரதிஷ்டை

கொழும்பு 02 பிரசித்திபெற்ற கங்காராம மகா விகாரையில் பல காலங்களாக இருந்த மிகவும் பழமையான சிவலிங்கமும்  நவக்கிரகங்களும் கடந்த 5ம் திகதி பிரதிஷ்டை செய்யப்பட்டு (17.07.2020)  மண்டல பூர்த்தி பூஜை சிறப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வு அதிவணக்கதுக்குரிய சங்கநாயக்கர் கலபொட ஞானேஸார தேரர் அவர்களின் அனுசரனையுடன், வெள்ளவாய தம்மஸ்ரீ தேரர் அவர்களின் பங்களிப்புடன், அகில இலங்கை ஸ்ரீ சாந்த சொரூபன் யாத்திரை குழுவின் தலைவரும் குருசுவாமியுமாகிய ஜெயமுருகன் வீரமூர்த்தி தலைமையில் சிவஸ்ரீ பாலசந்திர குருக்கள் ஐயா அவர்களினால் பூஜைகள் இடம்பெற்றது.

இலங்கையில் கொரோனா நோய் பரவும் சூழ்நிலையில் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைய குறிப்பிட்ட பொதுமக்களின் பங்களிப்புடன் இவ்விழா சிறப்புற நடைபெற்றது

இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு விகாரையில் சிவலிங்க, நவக்கிரக பிரதிஷ்டை ஒரு வரலாற்று நிகழ்வாகும். இன ஐக்கியத்தை மேம்படுத்தும் ஒரு நல்ல முயற்சியாகும் என்றுசமய வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

நன்றி தங்கவேல் யோகராஜா

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *