http://ceylononline.lk/

Ceylon Online News Portal

புதிதாக13 பேர் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானோர் எண்ணிக்கை 2687 ஆக அதிகரித்துள்ளது.  இனங்காணப்பட்ட 13 நோயாளர்கள் உள்ளடங்கலாக 669 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக  அடையாளம் காணப்பட்டவர்களில் 08 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் நோயாளர்களின் உறவினர்கள் என்பதுடன் ஐந்து பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான வகையில் 168 பேர் வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலைளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதன்கிழமை வரை 2470 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *