http://ceylononline.lk/

Ceylon Online News Portal

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் 9 பேர் பொலிசாரினால் மீட்பு (வீடியோ இணைப்பு)

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் 9 பேர் வழிமாறி சென்ற நிலையில் பொலிசாரினால் மீட்பு.

முல்லைத்தீவு உடையார்கட்டு குளத்தினை பார்வையிடுவதற்காக யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள்  2020.07.15 காலை 8.00 மணிக்கு சென்றனர். குளத்தின் அலைகரை வழியாக முத்துஐயன்கட்டு குளத்தினை பார்வையிடுவதற்கு விடுதலை புலிகளால் காட்டில் அமைக்கப்பட்ட பாதைவழியாக சென்றபோது வழிமாறிய நிலையில் மாணவர்களினால் பொலிஸ் தலைமையகத்திற்கு வழங்கிய தகவளுக்கு அமைவாக ஒட்டுசுட்டான் பொலிசாரும் முத்துஐயன்கட்டு  ராணுவத்தினரும் காட்டுப்பகுதியினை தேடுதலுக்கு உட்படுத்திய நிலையில் இன்று காலை 3.30மணியளவில் மீட்கப்பட்டனர்.

ஒட்டுசுட்டான் பொலிசார் மேலதிக விசாரனையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *