துரிதமாக பாதுகாப்பு வழிமுறைகளை வர்த்தமானி படுத்துங்கள் இல்லாவிடில் நாடு பாரிய பேரழிவை நோக்கி செல்லும்
நாட்டில் 2800 க்கும் மேற்பட்ட நபர்கள் சுய தனிமைப்படுத்த லுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். நிலைமை இவ்வாறு இருக்க அரசியல் கட்சிகளோ தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை தவிர்த்துக் கொள்ளாமல் உதாசீனப்படுத்தி வருவதால் நாடு பாரிய பேரழிவை நோக்கி செல்வதை தவிர்க்க இயலாது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திரன் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

உடனடியாக இவற்றை தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய பிரியவின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக இன்று பொது சுகாதார பரிசோதகர்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து கலந்துரையாடினர்.
தற்பொழுது சுய தனிமைப்படுத்துதல் உட்படுத்தப்பட்ட நபர்கள் மட்டும் அல்லாமல் எதிர்வரும் நாட்களில் புலனாய்வு பிரிவினர் மற்றும் ராணுவத்தினரின் தகவல்களுக்கு அமைய மேலும் தனிமை படுதலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்ற இவ்வேளையில் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் பாரியளவிலான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.
மேலும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மிகத் துரிதமாக வர்த்தமானி படுத்தப்பட்டால் இவற்றுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது எவ்வாறு என்று கேள்வியும் எழுப்பினார்.
நாட்டில் தேர்தலை நடத்த வேண்டாம் என்றோ பிரச்சாரக் கூட்டங்களை முற்றாக நிறுத்த வேண்டும் என்று நாம் கோரவில்லை. சரியான சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி கூட்டங்களை நடத்துமாறு மட்டும்தான் நாம் கோருகின்றோம் ஓரிரு தினங்களில் இவ்விடயம் தொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று கூறினார்.
