http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கட்டுநாயக்க விமான நிலையம் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வான்படையின் உதவியுடன் கட்டுநாயக்க விமான நிலையம் நேற்று (14) தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.


விமான சேவையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்களுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பயணிகள் பிரவேசபகுதி,வெளியாகும் பகுதி தீர்வையற்ற கடை தொகுதி,பயணிகள் தங்குமிடங்கள்,பயணிக்கும் பகுதிகள் ஆகியன உட்பட அனைத்து பகுதிகளும் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் நபர்களை இலங்கைக்கு அழைத்துவருவதனையும் 14திகதி தொடக்கம் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *