http://ceylononline.lk/

Ceylon Online News Portal

 பொலிவுட் இளம் நடிகை திவ்யா சௌக்சி உயிரிழந்தார்

நடிகை திவ்யா சௌக்சி புற்றுநோயால்  உயிரிழந்தார் , அவருக்கு வயது 29.

பொலிவுட் திரை உலகத்திற்கு 2016ஆம் ஆண்டு அறிமுகமான இவர் பல்வேறு தொலைக்காட்சி படங்கள் தொலைக்காட்சித் தொடர்களிலும் பல படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர் திவ்யா.

கடந்த சில மாதங்களாக  புற்றுநோய் சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வந்தார்.    இந்நிலையில் தான் பெற்றுவந்த சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.  தன் உயிர் பிரிய முன்பு தனது ரசிகர்களுக்கு கடைசியாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு அனைவர் மனதையும் உருக்குவதாக உள்ளது.

அதில் அவர் “நான் உங்களிடம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களுக்கு வார்த்தைகளே இல்லை சில மாதங்களாக மரணத்திலிருந்து தப்பிச் சென்று கொண்டிருந்த நான் இப்பொழுது அதன் கோரப்பிடியில் மீளாமல் சிக்கிக்கொண்டேன், நான் மரண படுக்கையில் இருக்கிறேன்  ஆனாலும் உறுதியாக இருக்கிறேன். எனக்கு மற்றுமொரு துன்பமில்லாத வாழ்க்கை இருக்கலாம். நீங்கள் அனைவரும் என்னை எப்படி அர்த்த படுத்தினீர்கள் என்பது கடவுளுக்கு மட்டும் தெரியும். சென்று வருகிறேன்”   என்று தனது உருக்கமான பதிவை வெளியிட்டு ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *