இலங்கையில் இன்றைய கொரோனா நிலைமை …முழுவிபரம்
இலங்கையில் இன்றைய கொரோன நோய் தொற்றாளர்களின் முழுவிபரம்

நேற்று இனங்காணபட்டோர் 29
அதில் 14 பேர் கந்த காடு புனர்வாழ்வு மையம்
11 பேர் சேனைப்புற புனர்வாழ்வு மையம்
2 பேர் ராஜாங்கனை பிரதேசத்தில்
மற்றும் மாலைதீவில் இருந்து வந்தவர்கள் 2 பேர்
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக புதிதாக இனம் காணப்பட்டார் எண்ணிக்கை 519
இதில் 440 பேர் புனர்வாழ்வு அளிக்கப்படுகின்றவர்கள்
60 பேர் பணியாளர்கள்
19 பேர் அண்மித்து பழகியவர்கள்
ராஜாங்கனை பகுதி 1,3,5 இல் இனம் காணப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 16
Ragama Melsta வைத்தியசாலையின் பணியாளர் 01, இவர் கந்த காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக பணிபுரிந்தவர்
கொழும்பு 2 W.A.D Silva மாவத்தையில் அமைந்துள்ள மொபிடெல் கிளைக்கு கொரோனோ நோய் தொற்றான ஒருவருடன் பழகிய ஒருவர் வந்தார் என்ற சந்தேகத்தின்பேரில் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது
கம்பஹாவில் வசிக்கும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவை புரியும் ஆலோசகர் ஒருவருக்கும் அவருடைய சாரதிக்கும் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
அச்சாரதி கம்பஹா நீதிமன்றத்தில் சாட்சிக்காக சமூகம் அளித்தார் என்ற காரணத்திற்காக நேற்றைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. அத்துடன் அவர் நெருங்கி பழகிய 13 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர்.
கந்த காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றிய இராணுவ அதிகாரி ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் பழகிய கெக்கிராவை ஏழு குடும்பத்தை சேர்ந்த 30 பேர் சுய தனிமைப்படுத்தப் பட்டனர்
இதன் மூலம் இலங்கையில் மொத்த கொரோன நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2665
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 666
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1988
