கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
புதிதாக மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவரும் கந்தக்காடு கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என அறியப்படுகிறது.

இன்றைய தினத்தில் மட்டும் 07 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள அதே வேளை தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2653 ஆக அதிகரித்துள்ளது.
