ஹோமகம பகுதியில் ஏழு குடும்பங்களை சேர்ந்தோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு
ஹோமகம பகுதியில் ஏழு குடும்பங்களை சேர்ந்த ஏறக்குறைய 30 பேர் சுய தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கந்த காடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றி கொரோனா தொற்றிற்க்கு இலக்கான ராணுவ வீரர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் என தெரியவந்துள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக இதுவரை 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 800 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 419 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலும், 11 பேர் சேனாபுரா மறுவாழ்வு மையத்திலும் உள்ள கைதிகள் எனவும், 63 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையதில் பணிபரியும் ஊழியர்கள் எனவும் மேலும் 16 பேர் அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
