http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்வதை உடனடியாக தவிர்க்கவேண்டும்; பிரபல நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் பிரசன்ன குணசேன எச்சரிக்கை

கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரிக்கும் இவ்வேளையில் நாட்டு பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் நடக்க வேண்டுமென்று இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் மிகவும் அத்தியாவசியமான பயணங்களை மட்டும் மேற்கொள்ளுமாறும் மாறாக தனியார் வகுப்புக்கள் திருமண மற்றும் மரண நிகழ்வுகளுக்கு செல்லுதல், நண்பர்களுடன் ஒன்று கூடுதல் போன்றவற்றை உடனடியாக தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்

வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து பயணம் மேற்கொள்ள வேண்டும்.  நாட்டில் தற்போதுள்ள நிலைமையை மிக மோசமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் இடமளிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *