இந்தியாவில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 100,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
கடந்த நான்கு நாட்களில் இந்தியாவில் 100,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 28,498 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 553 புதிய இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா தொற்று 906,752 மற்றும் 23,727 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
