http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் கைதியொருவர் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான 36 வயதுடைய வடக்கு கதுருவானா பகுதியைச் சேர்ந்த சிறைக் கைதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  பின்னர் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் உள்ள நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது இவ்வாறு கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *