சடுதியாக உயர்வடைந்து செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 2,646 ஆக உயர்வடைந்துள்ளது. சடுதியாக உயர்வடைந்து செல்லும் கொரோனா தொற்றிற்க்கு கந்த காடு புனர்வாழ்வு மையம் நிலையம் முக்கிய பங்கு பெறுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்த கருத்து பின்வருமாறு.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக இதுவரை 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 800 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 419 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலும், 11 பேர் சேனாபுரா மறுவாழ்வு மையத்திலும் உள்ள கைதிகள் எனவும், 63 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையதில் பணிபரியும் ஊழியர்கள் எனவும் மேலும் 16 பேர் அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
