http://ceylononline.lk/

Ceylon Online News Portal

குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண் தொழிலாளி மரணம்

தலவாக்கலை பி.கேதீஸ்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தில் 02.6.2020 இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சைக்காக லிந்துலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லிந்துலை சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான அலீமா பீபீ (வயது 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தேயிலை மலையில் வேலைசெய்துகொண்டிருந்தபோது தேயிலை மலையில் இருந்த குளவிக் கூடு ஒன்று கலைந்து இவர்களை தாக்கியுள்ளது.

இதன்போது குறித்த பெண் தொழிலாளி குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பொதுமக்கள் உதவியுடன் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மேலும் அவருடன் குளவி கொட்டுக்கு இலக்காகிய 3 ஆண் தொழிலாளர்கள் 4 பெண் தொழிலாளர்கள் ஆக 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த பெண் தொழிலாளியின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *