http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பி சிஆர் பரிசோதனைகளை உடனடியாக அதிகரிக்குமாறு கோரிக்கை

பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் சுகாதாரத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் நிபுணர்கள் நாளாந்தம் 2,500 பி.சி.ஆர். சோதனைகளை பரிந்துரைத்தபோதிலும், கடந்த இரண்டு மாதங்களாக நாளொன்றுக்கு 500-1600 பி.சி.ஆர். சோதனைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வைரஸ் பரவுவதை முறையாகக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் மேலும் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சகத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

ஒரு நாளைக்கு குறைந்தது 5,000 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் வைரஸின் இரண்டாவது அலையை தவிர்க்க முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *